இதயத்தில் நான்கறைகளின்றி
உன்னை மட்டும் சுமக்கும் ஓரறை
இருப்பதினால்
உயிரியல் இன்று பொய்யாகிப்போனது
சாதி மதம் இனம் என்ற
பௌதீக காரணிகள் நம் காதலை
கொன்றதால்
பௌதிகவியல் எனக்கு வெறுப்பாய் போனது
நம் இருவருக்குமிருந்த அன்பெனும்
இரசாயனம்
இன்று அந்தரத்தில் நிற்பதனால்
இரசாயனவியலின் நிலை கவலைக்கிடம்
மொத்தத்தில் நம் காதல்
கிளித்தெறியப்பட்ட கொப்பிகளாகி
தொடர்ந்து படிக்க(காதலிக்க) இயலாமல்
என் உயிரியல் பாடமின்று உயிரற்று கிடக்கிறது
No comments:
Post a Comment