கன்னி உந்தன் மேனியில்
கண்ணி வெடிகள் அடக்கம்
கத்தி விழிப் பார்வையில்
படு கொலைகள் தொடக்கம்
புல்லட்டு சிரிப்பினில்
புயல் காற்று அடிக்கும்
உன் மேனியினை ஆராய
குண்டிரண்டு தடக்கும்
பன்நாட்டு ஏவுகணைகள்
உன் இடையிடையே வெடிக்கும்
ஆயுதக்கிடங்குகள் உன்
ஆடைக்குள்ளே முடக்கம்
சத்தமின்றி சில நேரம்
மௌன யுத்தம் நடக்கும்
கண்ணீர்ப் புகைக் குண்டுகள்
உன் காதலிலே முளைக்கும்
முடியுமா ? எந்த யுத்தம் ?
வெற்றி என்று கிடைக்கும் ?
No comments:
Post a Comment